இயற்கை பேரிடர்களை துல்லியமாக கண்காணிக்கும் செயற்கைகோள்..!
இயற்கை பேரிடர்களை துல்லியமாக கண்காணிக்கும் செயற்கைகோளை நடப்பாண்டில் விண்ணில் செலுத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் பேசிய புவி அறிவியல் துறைகளின் இணையமைச்சர் இந்திய விண்வெளி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் இஓஎஸ்-3 செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள மையத்திலிருந்து ஏவ திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார்.
அதன்மூலம் இயற்கை பேரிடர்கள், நீர்நிலைகள், பயிர்கள், தாவரங்கள், வனப்பகுதி உள்ளிட்டவற்றை கண்காணிக்க முடியும் என்றும் நாளொன்றுக்கு நான்கு முதல் ஐந்து தடவை நாட்டை படம் எடுக்கும் என்றும் கூறியுள்ளார்.






