பிரபல நடிகை சுரேகா மாரடைப்பால் மரணம்..!
பாலிவுட்டில் 1970களில் இருந்து ஏராளமான படங்களில் நடித்து பிரபலமான நடிகை சுரேகா மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
பாலிவுட்டில் கடந்த 1978ஆம் ஆண்டு வெளியான கிஸான் கூஸ்ரா படத்தில் நடிகையாக அறிமுகமான சுரேகா ஏராளமான ஹிந்தி மற்றும் மலையாள படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார்.
1988ஆம் ஆண்டு வெளியான தமஸ், 1995ஆம் ஆண்டு வெளியான மம்மு, 2018 ஆம் ஆண்டு வெளியான பதாய்கோ ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கொரொனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேகா திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





