பள்ளி சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் கைது..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


துரையில் இருந்து பள்ளி சிறுமியை கடத்தி வந்து பாலியல் தொந்தரவு கொடுத்த ரவுடியை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை சேர்ந்த லோகேஷ் என்பவர் மீது 2 கொலை வழக்குகள், கொலை முயற்சி, வழிப்பறி உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

 

இந்த நிலையில் இவர் ஆண்டுதோறும் சபரிமலைக்கு செல்லும் பொழுது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள ஒரு குறிப்பிட்ட கடையில் பொருட்கள் வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அப்பொழுது அந்த கடை உரிமையாளரின் பேத்தியான 17 வயது சிறுமியுடன் இவருக்கு நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் 5 மாதங்களுக்கு முன்பு சிறுமியை இவர் ரகசியமாக சென்னைக்கு அழைத்து வந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். தற்போது அந்த சிறுமி 5 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக அக்கம்பக்கத்தினர் குழந்தைகள் நல அலுவலகத்தில் தகவல் கொடுத்தனர்.

 

தகவலறிந்து வந்த குழந்தைகள் நல அலுவலர்கள் காசிமேடு போலீசாருடன் சென்று அங்கு பார்த்த பொழுது லோகேஷ் சிறுமியை திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்திய விவரம் தெரியவந்துள்ளது. அதற்கு உடந்தையாக அவரின் தாய் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

 

உடனடியாக கைது செய்த போலிசார் அவர் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

 


Leave a Reply