வங்கி மேலாளர் பேசுவது போல் நடித்து பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.3 லட்சம் நூதன திருட்டு..!
ராமநாதபுரம் அருகே வங்கி மேலாளர் பேசுவது போல் நடித்து பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து மூன்று லட்ச ரூபாயை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். காஞ்சிரங்குடியை சேர்ந்த அமிர்தவள்ளி என்ற பெண்ணை மர்ம நபர் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.
வங்கி மேலாளர் பேசுவதாக கூறி அந்த மர்மநபர் காலாவதியாகி விட்டது, ஏடிஎம் கார்டு வர இருப்பதாக கூறி ஏடிஎம் கார்டு விவரங்களை கேட்டு உள்ளார். இதனை உண்மை என நம்பிய அந்த பெண் அதன் விபரங்களை தெரிவித்துள்ளார்.
மர்ம நபர் போனை துண்டித்து சிறிது நேரத்தில் பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப் பட்டதாக கூறும் தகவல் வந்துள்ளது.






