அப்பாக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு மகள் தற்கொலை..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


திருச்சி அருகே குடும்ப தகராறில் 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட பெண் ஒருவர் தனது தந்தைக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணப்பாறையை சேர்ந்த சாமிகண்ணு என்பவர் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனது மகளை புதுக்கோட்டையை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

 

முருகேசனுக்கும், அந்த பெண்ணுக்கும் 6 வயது மகளும், 4 வயதில் மகனும் இருந்தனர். கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது பிரச்னை ஏற்பட்ட நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த பெண் தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

 

இந்த நாட்டில் சமாதானம் ஏற்பட கணவர் வீட்டிற்கு திரும்பிச் சென்றபோது மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மனவேதனையில் இருந்த அந்த பெண் கடந்த 1ஆம் நாள் மகள், மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.

 

தற்கொலை செய்வதற்கு முன் அவரது அப்பாவுக்கு கடிதம் ஒன்று எழுதி வைத்துள்ளார். அதில் அன்புள்ள அப்பாவுக்கு என ஆரம்பித்து பல்வேறு பிரச்சினைகள் பற்றி குறிப்பிட்டுள்ளார். பிள்ளைகளையும் என்னையும் ரொம்ப வெறுப்பா நினைக்கிற புருஷன் கூட வாழ முடியாது… எங்கள் சாவுக்கு காரணம் என் புருஷனும், அவரின் அக்காளும் தான் என கூறி பிள்ளைகளுக்கு ஒரு நியாயம் வேண்டும் என எழுதியுள்ளார். இதையடுத்து கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply