--- --:--:-- --

பால்வெளி மண்டலத்தில் மின்னும் புதிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு..!

7

பால்வெளி மண்டலத்தில் மின்னும் புதிய நட்சத்திரம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். சிலி நாட்டில் உள்ள ஆய்வாளர்கள் தொலைநோக்கி கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இந்த நட்சத்திரத்தை கண்டனர்.

 

ஏறத்தாழ 25,000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கும் இந்த நட்சத்திரம் அவ்வப்போது மிகவும் பிரகாசமாக இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். துணைக் கோள் ஒன்றை நட்சத்திரம் சுற்றி வருவதால் அந்த துணைக்கோள் இடமிருந்து வெளிச்சத்தை உள்வாங்கி பின்னர் வெளியிடும் தன்மையை இந்த நட்சத்திரம் பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

 

இதன் அருகிலேயே சூரியனை விட 100 மடங்கு பெரியதான மற்றொரு நட்சத்திரம் இருப்பதை கண்டு பிடித்திருக்கும் விஞ்ஞானிகள் அது குறித்து ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon