--- --:--:-- --

கொரொனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி போட தேவையில்லையா..?

4

கொரொனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி போட தேவையில்லை என பரிந்துரை செய்திருக்க மருத்துவ வல்லுனர்கள் திட்ட மிடப்படாமல் வரைமுறையின்றி தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவது புதிய உருமாற்ற கொரொனாவுக்கு வழி வகுக்கலாம் என எச்சரித்துள்ளனர்.

 

எய்ம்ஸ் மருத்துவர்கள் கொரொனா தடுப்புக்கான தேசிய பணிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட மருத்துவ வல்லுநர் குழு பிரதமருக்கு சமர்ப்பித்து இருக்கும் அறிக்கையில் பெரும் திரளான மக்களுக்கு பாரபட்சமின்றி அரைகுறையாக தடுப்பூசி போடுவது, தடுப்பு மருந்துகளை மிஞ்சும் வகையில் உருமாற்ற கொரொனாகளுக்கு வித்திடலாம் என எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

 

சிறார்கள் உள்ளிட்ட பெரும்பாலான மக்களுக்கு ஒட்டுமொத்தமாக தடுப்பூசி போடுவதை விட பலவீன மாணவர்களுக்கும் பாதிக்கப்படக் கூடிய ஆபத்து உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடுவதே தற்போதைய இலக்காக கருதப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.

 

கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு பின்னர் அதில் இருந்து குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி போட தேவையில்லை என்றும் அப்படி தடுப்பூசி போடுவதால் பலன் உண்டு என சான்றிதழ் திரட்டிய பிறகு செயல்படுத்தலாம் என்று கூறியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon