--- --:--:-- --

கொரொனா சிகிச்சை மையத்தில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை..!

5

தர்மபுரி அருகே அரசு கொரொனா சிகிச்சை மையத்தில் ஒரு நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்தூரை சேர்ந்த லாரி ஓட்டுனர் கொரொனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் செட்டிகரை பகுதியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரொனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

 

இன்று காலை அங்கு உள்ள சுகாதார பணியாளர்கள் அறைக்கு சென்றபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தருமபுரி நகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

 

அங்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon