--- --:--:-- --

திருப்பூரில் கார் ஆம்புலன்ஸ் சேவையை தொடக்கி வைக்கிறார் ஸ்டாலின்..!

4

முதலமைச்சர் ஸ்டாலின் திருப்பூரில் கார் ஆம்புலன்ஸ் சேவையை தொடக்கி வைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சுப்பிரமணியன் அரசு மருத்துவமனையில் புதிய படுக்கைகள் அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டார்.

 

பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன் திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 12 ஆயிரம் பேருக்கு கொரொனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக கூறினார்.

 

அரசு மருத்துவமனையில் புதிய சிகிச்சை மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ளதாகவும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அப்போது அமைச்சர் சாமிநாதன், கயல்விழி, செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon