கோவையில் அதிகரிக்கும் கொரொனா பரவல்..!
கொரொனா தொற்றால் சென்னையை விட கோவை மாவட்டத்தில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கோவையில் 4 ஆயிரத்து 768 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது முந்தைய நாளை விட 632 பேர் அதிகமாகும். கடந்து கொரோனா வைரஸ் பரவிய நாளிலிருந்து அதுவரையில் சென்னையை விட கோவையில் அதிக பாதிப்பு இதுவே முதன்முறையாகும்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் கோவை மாவட்டத்தில் கொரொனா பரவலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறினார்.






