--- --:--:-- --

பள்ளி வளாகங்களில் மாணவர்கள் நுழையவும், விளையாடவும் அனுமதிக்க கூடாது..!

8

தமிழகத்தில் முழு ஊரடங்கு காலத்தில் பள்ளி வளாகங்களில் மாணவர்கள் நுழையவும் விளையாட அனுமதிக்க கூடாது என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

 

இந்த நிலையில் கல்வித் துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வருகின்றனர்.

 

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் ஊரடங்கு காலத்தில் பள்ளி வளாகங்களில் மாணவர்கள் பொதுமக்கள் யாரும் இருக்கக்கூடாது எனவும் பல மைதானங்களில் கூட்டமாக விளையாடுவதற்கு வழிவகுக்கும் என்பதால் அனுமதி அளிக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.

 

மேலும் பள்ளியின் அறிவிப்பு பலகையில் இதுதொடர்பான அறிவிப்பு எழுதி வைக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் . பள்ளியின் வளாகத்தில் மாணவர்கள் விளையாடுவது தெரியவந்தால் கிராம நிர்வாக அலுவலர் காவல்துறைக்கு புகார் அளிக்க வேண்டும் எனவும் தேவையற்ற மக்கள் இயக்கத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியரை முழுப் பொறுப்பாவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon