--- --:--:-- --

கொரொனா நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த பெண் உயிரிழப்பு..!

2

திருவள்ளூரில் கொரொனா நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த பெண் மருந்தாளர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சபீனா என்று அவர் கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு குழந்தைகள் நல திட்டத்தின் கீழ் ஒப்பந்த மருந்தாக பணியாற்றி வந்தார்.

 

கடம்பத்தூர் வட்டார மருத்துவமனையில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தொற்று பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அவர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

 

இந்த சூழலில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட சபீனா தாம்பரம் அரசு மருத்துவமனையில் 5 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 

அவற்றின் தொற்றின் தீவிரம் அதிகரித்து அவர் உயிரிழந்தார். மக்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் ஒப்பந்த தொழிலாளர் என்பதால் அவரை சுகாதாரத்துறையினர் கண்டுகொள்ளவில்லை என குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon