ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் மு.க.ஸ்டாலின்..!
சட்டமன்ற திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு க ஸ்டாலின் இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறா.ர் புதிய அரசின் பதவி ஏற்பு விழாவை எளிமையான முறையில் நடத்துவது குறித்து அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்ற நிலையில் அந்தக் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் 8 பேர் உட்பட 133 பேர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் சட்டமன்ற திமுக தலைவராக ஸ்டாலினை அந்த கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் முன்மொழிந்தார். அதனையடுத்து சட்டமன்ற திமுக தலைவராக ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் முடிந்த பின்னர் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி வீட்டிற்கு ஸ்டாலின் நேரில் சென்று அவரிடம் வாழ்த்து பெற்றார். அதன்பின்னர் மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நிலையத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.
தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





