--- --:--:-- --

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக 11 நோயாளிகள் உயிரிழப்பு..!

4

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக 11 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி முதல் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழக்க தொடங்கியுள்ளனர்.

 

இதனையடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளிடம் ஆக்சிஜன் கோரப்பட்டது. ஆனால் தங்கள் தேவைக்கு மட்டுமே ஆக்சிஜன் இருப்பதாக கூறி வழங்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. மூச்சுத் திணறல் ஏற்பட்ட நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸ் வாகனங்களில் இருந்த ஆக்சிஜன் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக இரவு பதினொரு மணிக்கு அடுத்தடுத்து மொத்தம் 11 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் மருத்துவமனைக்கு நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டார்.

 

மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஆக்ஸிஜன் வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு அதிக அளவில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்ததாக கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon