மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் நாளை முதல் 20-ஆம் தேதி வரை அலுவலகத்திற்கு வர தேவையில்லை..!
மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் நாளை முதல் 20-ஆம் தேதி வரை அலுவலகத்திற்கு வர தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நாளை முதல் 20-ஆம் தேதி வரை அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அதிகபட்சம் 50 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க வேண்டுமென்றும், மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழுவதுமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





