--- --:--:-- --

பெண் கலெக்டருக்கு ஆபாச செய்தி அனுப்பியது உண்மையா?

1

எதிர்க்கட்சிகள் தன் மீது திட்டமிட்டு தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டுக்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் சமூக வலைத்தளங்களில் பரவிவரும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

 

திமுக எம்.பி கனிமொழி, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இந்த விவகாரம் குறித்துக் கண்டனம் தெரிவித்து, இதுகுறித்து உரிய விசாரணை தேவை என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இந்நிலையில், கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்தில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

 

 

பின்னர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக வந்த புகார் தொடர்பாக விளக்கமளித்த எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், அதிகாரிகள்மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அதுபோன்ற செயலில் நான் ஈடுபடவில்லை. எதற்காக இப்படி தவறாக பரப்புகிறார்கள் என்பது பற்றி எனக்கும் புரியவில்லை. இந்த மாவட்டத்தில் தவெக சார்பில்வெற்றி பெற்ற வேட்பாளர் நான் ஒருவர் மட்டுமே. அதனால் என் மீதும் எங்கள் கட்சி மீதும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு அவதூறை பரப்புகிறார்கள் என விளக்கமளித்தார்.

 

 

மேலும்”கடந்த ஆட்சி காலத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பேருந்து நிலையம் ஊழல் குறித்து நான் முதல்வரிடம் அறிக்கை அனுப்பியதால், எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுத் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon