--- --:--:-- --

பிரசவத்தின் போது தாயும், சேயும் உயிரிழந்ததால் அதிர்ச்சி..!

1

வேலூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் மகப்பேற்றின் போது குழந்தையும். தாயும் உயிரிழந்ததாக ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். ராணிப்பேட்டையை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

அவருக்கு பிறந்த பெண் குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மகாலட்சுமி சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவர்களின் அலட்சியத்தால் தாயும், சேயும் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

 

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். பிரசவித்த தாயும் சேயும் உயிரிழந்த நிலையில் பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கலுக்கு சிகிச்சை அளித்த நிலையில் இருவரும் உயிரிழந்ததாக தனியார் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon