--- --:--:-- --

மே 1 ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை..!

10

ரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் வரும் ஒன்றாம் தேதி முதல் பள்ளிக்கு வர தேவையில்லை என்று பள்ளிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

 

மாணவர்கள் பள்ளிக்கு வந்து கல்வி கற்கும் சூழல் தற்போது வரை ஏற்படாத நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பள்ளி கல்வி இயக்குனரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி குறித்த அறிவிப்பு வரும் வரை ஆசிரியர்கள் வீட்டிலிருந்தபடியே வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்கவும் பயிற்சி மேற்கொள்ளவும் ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடியே வழிகாட்டுதலை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

வரும் கல்வியாண்டில் பள்ளிகளை தயார் செய்ய வேண்டி மே மாதம் கடைசி வாரம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டியிருக்கும் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon