புதுச்சேரியில் மதுபான கடைகளை மூட உத்தரவு..!
தினசரி கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வரும் 30ஆம் தேதி வரை மதுபானக் கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் கொரொனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் வருவதை கட்டுப்படுத்த திரையரங்குகள், அழகு நிலையங்கள், பார்கள் மூடப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் உள்ள அனைத்து விதமான மதுபான கடைகள் மற்றும் சாராயக் கடைகளையும் மூட கலால் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





