அஜீத்துடன் செல்பி எடுத்த பெண்ணை பணிநீக்கம் செய்த மருத்துவமனை நிர்வாகம்..!
நடிகர் அஜித் சிகிச்சைக்காக மருத்துவமனை சென்ற போது அதனை வீடியோ எடுத்த பெண் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அஜித்தின் மேலாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண் தனக்கு மீண்டும் பணி கிடைக்க வேண்டும் எனவும் கூறி வருகிறார்.
கடந்த ஆண்டு மே மாதம் சிகிச்சைக்காக நடிகர் அஜீத் தனது மனைவி ஷாலினியுடன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று இருந்தார். அப்போது அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த அஜீத்தின் ரசிகையான சாலிகிராமம் பகுதியை சேர்ந்த பர்சானா அஜித் மருத்துவமனைக்குவ வருவதை வீடியோஎடுத்துள்ளார்.
மேலும் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியான நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்த மருத்துவமனை நிர்வாகம் பின்னர் பணியிலிருந்து நீக்கியது. இதனால் வருமானம் இன்றி தவித்த பர்ஸானா அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவிடம் உதவி கோரியுள்ளார்.
பின்னர் தனக்கு உதவ வந்துவிட்டு பின்வாங்கியதாக அஜீத்தின் மேலாளர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என காவல்துறை வழக்குப் பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது.






