--- --:--:-- --

கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவின் வீடியோ வைரல்

14

கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியை பின்புறமாக இருந்தபடி தூக்கி பெருமை கொள்ளும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட்டில் பிஸியாக இருக்கும் விராட் கோலியும் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

 

அவர்களுக்கு கடந்த ஜனவரி 11ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்த ஜோடி தங்களது புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் பகிர்ந்தும் ரசிகர்களை உற்சாகப்படுத்திய வருகின்றனர். இந்த நிலையில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

 

அந்த வீடியோவில் விராட் கோலியை பின்புறமாக இருந்து பிடித்துக்கொள்ளும் அனுஷ்கா ஷர்மா அவரை மேலே தூக்கினார். மீண்டும் தன்னை தூக்குமாறு விராட் கோலி கூற அதேபோன்று பின்புறமாக நின்று கொண்டு விராட்டி அனுஷ்கா தூக்கினார்.

 

இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அனுஷ்கா என்னால் இது முடிந்தது தானே என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon