--- --:--:-- --

நேரலையின் போது செய்தியாளருக்கு நாயால் நேர்ந்த சம்பவம்..!

4

ஷ்யாவில் செய்தி நேரலையின்போது பத்திரிகையாளரின் மைக்கை நாய் பிடுங்கி கொண்டு ஓடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்களுக்கு பலவித சிரமங்கள் ஏற்படுவது வழக்கம்.

 

அதிலும் களத்துக்கு சென்று கள நிலவரத்தை நேரலையில் செய்தியாக அளிப்பவர்களுக்கு தொல்லைகள் அதிகம். இதில் பல வேடிக்கை சம்பவங்கள் அரங்கேறி வருவதை நாம் பார்த்ததுண்டு. தற்போது அதுபோன்ற வேடிக்கை சம்பவம் ரஷ்யாவில் நிகழ்ந்துள்ளது.

 

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் வசந்தகாலம் வருகையையொட்டி நடாஷா என்ற பெண் பத்திரிக்கையாளர் நேர்வழியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரின் கையிலிருந்த மைக்கை பிடுங்கி கொண்டு நாய்ஓடியது.

 

விடாமல் துரத்தி சென்று நாயிடமிருந்து மைக்கி மீட்டார். இந்த சம்பவத்தால் நேரலையிலிருந்த தொகுப்பாளர் என்ன செய்வதென்று தெரியாமல் சிரிப்பு கலந்த அதிர்ச்சியில் இருந்தார். தற்போது இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon