--- --:--:-- --

வெற்றிநடை போடும் விஜயகுமார்… வீடுவீடாகச் சென்று வாக்குசேகரிப்பு…

vijay 03

திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் விஜயகுமார், அதிமுக அரசின் சாதனைகளைச் சொல்லி தமிழகம் வெற்றி நடை போடுவதாகக்கூறி வாக்கு சேகரித்தார்.

 

திருப்பூர் ஊரகப்பகுதிகளை உள்ளடக்கிய வடக்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில், சிட்டிங் எம்.எல்.ஏ. விஜயகுமாரே மீண்டும் போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால், அதிமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினருடன் இணைந்து, தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார் விஜயகுமார்.

எளிமையானவர், அதிர்ந்து பேசாதவர், எளிதில் அணுக முடியும் என்பது உள்ளிட்ட பிளஸ் பாயிண்டுகள், இம்முறையும் விஜயகுமாரே வெற்றிவாகை சூடுவதற்கான வாய்ப்புகளை பிரகாசப்படுத்தி தந்துள்ளது. அத்துடன், கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றித் தந்துள்ளார். அவற்றையெல்லாம் பட்டியலிட்டு, வீடு வீடாகச் சென்று விஜயகுமார் வாக்கு சேகரித்து வருகிறார்.

 

பிரசாரத்தின் போது விஜயகுமார் பேசியதாவது: அ.தி.மு.க. அரசின் சாதனை திட்டங்கள் தொடர இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். கடந்த 5 ஆண்டுகளில் அ.தி.மு.க. அரசு தமிழகத்தில் குழந்தைகள், இல்லத்தரசிகள், மாணவ-மாணவிகள், முதியவர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் வரலாறு சொல்லும் அளவுக்கு ஏராளமான சாதனை திட்டங்களை வழங்கி உள்ளது.

ஸ்மார்ட் சிட்டியின் மூலமாக திருப்பூரின் பல்வேறு பகுதிகள் தற்போது அழகூட்டப்பட்டு வருகின்றன. மேலும் 6 விலையில்லா கியாஸ் சிலிண்டர்கள், வாஷிங்மெசின் என வரும் தேர்தலில் வெற்றி பெற்ற உடன் பெண்களுக்கு பயன்படும் வகையிலான அறிவிப்புகளை தேர்தல் அறிக்கையாக அ.தி.மு.க. அரசு கூறி உள்ளது.

 

திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பல்லாண்டு கால கனவு திட்டமான அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு நிறைவேற்றி உள்ளது.

திருப்பூர் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடே இருக்கக்கூடாது என்பதற்காக ரூ.1340 கோடி மதிப்பில் 4-வது குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு, விரைவில் குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது. எனவே அ.தி.மு.க. அரசின் சாதனை திட்டங்கள் தொடர, இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

 

முன்னதாக, விஜயகுமார் பிரசாரத்திற்கு செல்லுமிடங்களில் பொதுமக்கள் உற்சாகத்துடன் குரல் எழுப்பி, மலர்மாலைகளை அணிவித்து, அவருக்கு ஆரவார வரவேற்பு அளித்தனர். விஜயகுமாருக்கு ஆதரவாக கூட்டணி கட்சியினரும் வாகனங்களில் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon