--- --:--:-- --

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்று அசத்தல்..!

4

லகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிர் அணி 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றுள்ளது. உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.

 

இதில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 53 நாடுகளைச் சேர்ந்த 294 வீராங்கனைகள் பங்கேற்றனர். போட்டி நடத்தும் இந்தியா சார்பில் 57 பேர் கொண்ட அணி களமிறங்கியுள்ளது.

 

இந்தியா பல்வேறு பிரிவுகளில் தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை குவித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்றது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon