ஆன்லைன் விளையாட்டால் மனநலம் பாதிக்கப்பட்டு பாட்டியை கொலை செய்த இளைஞர்..!
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஆன்லைன் விளையாட்டால் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தனது பாட்டியை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூகொணலவாடி கிராமத்தை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் தனது 80 வயதான பாட்டியை கல்லால் அடித்துக் கொலை செய்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் ஹரிஹரனை கைது செய்து விசாரித்ததில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆன்லைன் வகுப்பு மூலமாக வேளாண்துறை ஹரிஹரன் படித்து வந்துள்ளார். அப்போது வகுப்பு நேரம் போக செல்போனில் விளையாடத் தொடங்கிய ஹரிஹரன் ஒரு கட்டத்தில் குடும்பத்தினருடன் கோபமாக பேசி வந்துள்ளார்.
இதனையடுத்து மருத்துவரிடம் அவரை அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில் ஆன்லைன் விளையாட்டால் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து தனது வீட்டில் இருந்தால் விரைவில் குணமடைய மாட்டார் எனக் கூறி அவரது பாட்டி வீட்டில் கொண்டு போய் விட்டுள்ளனர்.
இந்தநிலையில் மாத்திரைகளை சரியாக சாப்பிடாமல் இருந்த ஹரிஹரன் தூங்கிக்கொண்டிருந்த பாட்டுயின் முதுகின் மீது அமர்ந்து தான் கடவுள் எனவும் பாட்டியை கடவுள் கொலை செய்யச் சொன்னார் எனக்கூறி கல்லால் அடித்துக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட பாட்டியை அடித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






