முடி திருத்தம் செய்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்..!
சென்னை வேளச்சேரி தொகுதி அதிமுக வேட்பாளர் அசோக் பிரச்சாரத்தின் போது அங்குள்ள சலூன் கடையில் ஒருவருக்கு முடி திருத்தம் செய்துள்ளார். வேளச்சேரி தொகுதி அதிமுக சார்பில் அசோக் போட்டியிடுகிறார்.
கடந்த ஒரு வாரமாக வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அசோக் இன்று அங்குள்ள சலூன் கடையில் இளைஞர் ஒருவருக்கு முடிதிருத்தம் செய்துள்ளார். எளிதில் அணுகக் கூடியவர் என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் இது போன்ற வித்தியாசமான பிரச்சார யுக்திகளை கையாண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.






