--- --:--:-- --

மாசுபட்ட நாடுகளின் தரவரிசையில் இந்தியா முதலிடம்..!

5

லகின் மிகவும் மாசுபட்ட 30 நகரங்களில் இந்தியாவில் மட்டும் 22 நகரங்கள் உள்ளன என்றும் உலகளவில் மிகவும் மாசுபட்ட தலைநகராக டெல்லி திகழ்கிறது என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக காற்றின் தயாரிப்பு 2020 என்ற தலைப்பில் உலக அளவில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

மிகவும் மாசுபட்ட நகரங்களின் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது உலக அளவில் மிகவும் மாசுபட்ட முதல் 30 நகரங்களில் 22 இடங்கள் இந்தியாவில் உள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதிகம் மாசுப்பட்ட நகரங்களில் முதலிடத்தில் சீனா உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் 9 இந்திய நகரங்கள் உள்ளன.

 

காசியாபாத் உலகின் இரண்டாவது மாசுபட்ட நகரமாகவும் அதைத்தொடர்ந்து பிரன்ஹேகொண்ட ஜலல்பூர் கிரேட்டர் நொய்டா கான்பூர் லக்னோ மற்றும் தலைநகராக டெல்லி திகழ்கிறது.

 

போக்குவரத்து, மின்சாரம், உற்பத்தி தொழில், கட்டுமானம் மற்றும் வேளாண் கழிவு முதலியவை இந்தியாவின் காற்று மாசுபாட்டை அதிகரிக்க முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon