ஆஸ்கார் விருது வழங்கும் விழாவை நடிகை பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்கவுள்ளார்.
உலகத் திரைப்பட வரலாற்றில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருது வழங்கும் விழாவை இந்தியாவின் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்க உள்ளார். 93 வது ஆஸ்கர் விருதுக்கான திரைப்படங்களின் பரிந்துரைகள் கடந்த திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன.
அதன்படி 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. ஆஸ்கர் விருது விழாவை இந்தியாவின் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்க உள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் விருது கொடுப்பதற்காக கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படங்களின் பட்டியலை வெளியிடுகிறார். பிரியங்கா சோப்ரா உடன் அவரது கணவரும் தொகுத்து வழங்க உள்ளார்.






