தமிழகத்தில் கொரொனா அதிகரித்து வருவதால் அதிர்ச்சி..!
தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் உயர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரொனா பாதிப்பு இரு வாரங்களுக்கு முன்பு 300 என்ற அளவில் குறைந்து வந்தது . ஆனால் படிப்படியாக உயர்ந்து கடந்த 24 மணிநேரத்தில் 836 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்து 60 ஆயிரத்து 562 அதிகரித்துள்ளது. அதேவேளையில்ஒரே நாளில் 553 பேர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 12,551 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டங்கள் அளவில் குறிப்பாக சென்னையில் பாதிப்பு அதிகரித்துள்ளது.
அதிகளவாக சென்னையில் ஒருநாளில் 317 பேருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 81 பேருக்கும் கோவை மாவட்டத்தில் 70 பேருக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் நான்கு நாட்களில் கொரொனா வேகமாக எழுந்திருப்பது அந்த பகுதி மக்களை அஞ்ச வைத்துள்ளது.
கடந்த ஆண்டில் மார்ச் தொடக்கத்திலிருந்து கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாக பரவினாலும் சில வாரங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதை தற்போது மீண்டும் தோன்றுகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் பொது முடக்கத்தை தடுக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.






