பாலியல் குற்றங்களை தடுக்க குற்றவாளிகளுக்கான வயது வரம்பு 16 ஆக குறைப்பு..!
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 18-ல் இருந்து 16 ஆக குறைக்க லாம் என நாடாளுமன்ற நிலைக்குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
இதனால் 16 வயதான இளம் குற்றவாளிகளை மிகவும் கொடூரமான பாலியல் அல்லது கொலைக் குற்றங்களை நடத்துவதில் இருந்து தடுக்க இயலும் என எம்பி ஆனந்த் சர்மா தலைமையிலான உள்துறை விவகாரங்களுக்கான நிலை குழு பரிந்துரைத்துள்ளது.
தற்போது இளம் குற்றவாளிகள் பலர் கொடூர குற்றங்களை செய்யும் நிலை உள்ளதால் மத்திய அரசு தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் எனவும் நிலைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.






