--- --:--:-- --

சரத்குமார் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! நடிகை ராதிகா போட்டியில்லை!!

Sarath kumar 01

சமத்துவ மக்கள் கட்சியின் 37 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சரத்குமார் இன்று வெளியிட்டார். வரும் தேர்தலில் சரத்குமார், ராதிகா சரத்குமார் போட்டியிடவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. வரும் 6ம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், 12ம் தேதி தொடங்கியது. இது நிறைவடைய இன்னும் 4 நாட்களே உள்ளன. முக்கிய கட்சிகள் அனைத்தும் தொகுதி உடன்பாட்டை முடித்துக் கொண்டு, வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டதால், வேட்புமனு தாக்கல் விறுவிறுப்படைந்துள்ளது.

 

இந்த தேர்தலில், திமுக, அதிமுகவுக்கு எதிராக மூன்றாவது அணியாக உருவாகி இருக்கும் மக்கள் நீதி மய்யமும் கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும் கூட்டணி அமைத்து போடுகின்றன. சமக-வுக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

 

இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் 37 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சரத்குமார் இன்று வெளியிட்டார். மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் தானோ, தனது மனைவி ராதிகாவோ போட்டியிடவில்லை என்று, சரத்குமார் தெரிவித்துள்ளார். ராதிகா வேளச்சேரியில் போட்டியிடுவார் என்று, கடந்த மாதம் பொதுக்குழு கூட்டத்தில் சரத்குமார் அறிவித்திருந்தார்.

 

சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுவோர் பட்டியல் விவரம் வருமாறு:-

கடலூர் -ஆனந்தராஜ்

வாசுதேவநல்லூர் -சின்னசாமி

விருதுநகர் -மணிமாறன்

திருச்செங்கோடு – ஜனகராஜ்

நாங்குநேரி – சார்லஸ் ராஜா

தூத்துக்குடி- என்.சுந்தர்

மதுரை தெற்கு – ஈஸ்வத்

விளாத்திகுளம் – வின்சன்

தென்காசி -தங்கராஜ்

ராஜபாளையம் – விவேகானந்தன்

சிவகங்கை -ஜோசப்

அம்பாசமுத்திரம் -கணேசன்

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon