--- --:--:-- --

கூகுளுக்கு 36 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும்..!

10

இன்கோகினிடோ எனப்படும் மறைநிலை வெப் பிரவுசிங் எனப்படும் 3 கூகுள் பயனாளர்களின் தரவுகளை திருடிய குற்றத்திற்காக கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட்டுக்கு அமெரிக்காவில் சுமார் 36 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

 

கூகுல் நிறுவனம் தனது பயனாளர்களின் தரவுகளை பரவலாக திருடுகிறது என்றும் அதிலும் கூகுள் குரோமில் உள்ள மறை நிலை மோட் மூலமாக வெப் பிரவுசிங் தரவுகளையும் திருடுகிறது என கடந்த ஜூன் மாதம் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது.

 

இதற்காக கூகுள் அலநாட்டிக்ஸ், கூகுள் அட் மேனேஜர் மற்றும் மொபைல் செயலிகளை கூகுள் பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது தனிநபர் ரகசியம் காக்கும் கொள்கைக்கு எதிரானது என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு உள்ளதால் இந்த அபராதம் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon