--- --:--:-- --

ஒவைசி கட்சி போட்டியிடும் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு!

Owaisi 01

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் ஏஐஎம்ஐஎம் கட்சியின் வேட்பாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில், வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் பலமுனை போட்டி நிலவுகிறது. டிடிவி தினகரனின் அமமுக கூட்டணியில் தேமுதிக, ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி உள்ளிட்டவை போட்டியிடுகின்றன.

 

அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணியில் ஒவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்குவதாக டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். அதன்படி வாணியம்பாடி, சங்கராபுரம், கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளில் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது.

 

இந்த 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை, ஏஐஎம்ஐஎம் அறிவித்துள்ளது. அதன்படி, வாணியம்பாடி – வக்கீல் அஹமத், சங்கராபுரம் – முஜிபுர் ரஹ்மான், கிருஷ்ணகிரி – அமீனுல்லா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon