மதிமுக தேர்தல் அறிக்கை… 17இல் வெளியிடுகிறார் வைகோ!
சட்டசபைத் தேர்தலுக்கான மதிமுக தேர்தல் அறிக்கையை வரும் 17 ஆம் தேதி வைகோ வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் வைகோவின் மதிமுக இடம் பெற்றுள்ளது. அக்கட்சிக்க்கு திமுக கூட்டணியில் 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன; அவற்றில் உதய சூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிடுகிறது.
அதன்படி, மதுராந்தகம் – மல்லை சத்யா, சாத்தூர் – ரகுராமன், வாசுதேவநல்லூர் – சதன் திருமலைக்குமார், பல்லடம் – முத்துரத்தினம், அரியலூர் – சின்னப்பா, மதுரை தெற்கு – பூமிநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மறுமலர்ச்சி தி.மு.க. தேர்தல் அறிக்கையை 17.3.2021 புதன்கிழமை காலை 11 மணிக்கு தலைமை நிலையமான சென்னை தாயகத்தில் வெளியிடுகிறார்.
அதை தொடர்ந்து, சட்டமன்ற பொதுத்தேர்தலில், தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வாக்குக் கேட்டு தேர்தல் பிரச்சாரப் பயணத்தை, வரும் 18.3.2021 அன்று வைகோ தொடங்குகிறார். அன்று மாலை 5 மணிக்கு கொளத்தூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளரும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை ஆதரித்து தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வைகோ சிறப்புரை ஆற்றுவார் என்று மதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




