--- --:--:-- --

பாஜகவுக்கு தாவிய திமுக எம்.எல்.ஏ.. தேர்தல் நேரத்தில் திடீர் திருப்பம்… காரணம் என்ன?

Saravanan DMK MLA

வரும் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு தரப்படாத நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ சரவணன் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்.எல்.ஏ-ஆக இருப்பவர் டாக்டர் சரணவன். இவர், திமுக மருத்துவ அணியின் மாநில நிர்வாகிகளில் ஒருவராகவும் உள்ளார். எதிர்வரும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட திருப்பரங்குன்றம், மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் விருப்பமனு அளித்தார்.

 

ஆனால், திருப்பரங்குன்றம் தொகுதியை, கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, வலுக்கட்டாயமாக திமுக தந்ததாக கூறப்படுகிறது. மதுரை வடக்கு தொகுதியும், திமுக சார்பில் தளபதி என்பவருக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், டாக்டர் சரணவன் கடும் அதிருப்தி அடையந்தார். அவரது ஆதரவாளர்கள், இனியும் திமுக- வில் நீடிக்கக்கூடாது என்று வலியுறுத்தி வந்தனர்.

இந்த சூழலில், திடீர் திருப்பமாக, பாஜக மாநில தலைவர் எல். முருகன் தலைமையில், திமுக எம்.எல்.ஏ. சரவணன் இன்று பாரதிய ஜனதாவில் இணைந்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பாஜக தலைவர் எல். முருகன், பாஜகவின் நோக்கம் ஊழலற்ற ஆட்சி, அதை நிச்சயம் கொடுப்போம். ஆனால், திமுகவால் அதை தரமுடியாது. மத்திய அரசு தற்போது செய்து கொண்டிருக்கும் திட்டங்களை திமுக தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது என்றார்.

 

திமுகவில் சேருவதற்கு முன்பு, டாக்டர் சரவணன் மதிமுகவில் இருந்தார். ‘அகிலன்’ திரைப்படம் மூலமாக நடிகர் ஆனார். அடுத்தடுத்து சில படங்களில் நடித்த சரவணன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon