--- --:--:-- --

அமமுக 2ம் கட்ட பட்டியல்… கோவில்பட்டியில் டிடிவி போட்டி! திருப்பூர் தெற்கில் விசாலாட்சி!!

TTV 04

அமமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. டிடிவி தினகரன் கோவில் பட்டியில் போட்டியிடுகிறார்.

 

இது தொடர்பாக, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிமன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

அதன்படி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கோவில்பட்டியில் போட்டியிடுகிறார். அங்கு, அதிமுக வேட்பாளராக கடம்பூர் ராஜு நிறுத்தப்பட்டுள்ளார். அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்த ராஜவர்மன் எம்.எல்.ஏ மீண்டும் சாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

திருப்பூர் தெற்கு தொகுதியில், முன்னாள் மேயர் ஏ. விசாலாட்சி நிறுத்தப்பட்டுள்ளார். கிணத்துக்கடவு – ரோகினி கிருஷ்ணகுமார், ராமநாதபுரம் – மண்டபம் ஜி. முனியசாமி, மானாமதுரை – மாரியப்பன் கென்னடி, முதுகளத்தூர் – எம். முருகன், சேலம் தெற்கு – வெங்கடாஜலம், ஓமலூர் – கே.கே. மாதேஸ்வரன் உள்ளிட்டோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

குன்னூர் – கலைச்செல்வன், பல்லடம் – ஜோதிமணி, கோவை வடக்கு – அப்பாதுரை, மன்னார்குடி – காமராஜ், ஆண்டிப்பட்டி – ஜெயக்குமார், திருவாடானை – ஆனந்த், ஸ்ரீவில்லிப்புத்தூர் – சந்தோஷ்குமார், காரைக்குடி- பாண்டி, போடி- முத்துசாமி, நெல்லை – பாலகிருஷ்ணன், திருப்பரங்குன்றம் – டேவிட் அன்ணாதுரை, மதுரவாயல் – லக்கி முருகன், பூந்தமல்லி – ஏழுமலை ஆகியோரும் அமமுக 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon