--- --:--:-- --

பாமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! ஜி.கே. மணி பென்னாகரத்தில் போட்டி

Ramados 02

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, 10 பேர் கொண்ட முதலாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாமக தலைவர் ஜி.கே. மணி பென்னாகரத்தில் போட்டியிடுகிறார்.

 

இது குறித்து, பாமக தலைவர் ஜி.கே. வெளியிட்டுள்ள அறிக்கையில், 10 வேட்பாளர்கள், அவர்கள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

அதன்படி, பென்னாகரத்தில் ஜி.கே. மணி, திண்டுக்கல் ஆத்தூரில் திலகா பாமா, கீழ்பென்னாத்தூரில் செல்வகுமார், திருப்போரூரில் கி. ஆறுமுகம், ஜெயங்கொண்டத்தில் கே. பாலு போட்டியிடுகின்றனர்.

 

 

ஆற்காடு தொகுதியில் கே.எல். இளங்கோவன், திருப்பத்தூரில் டி.கே. ராஜா, தருமபுரியில் எஸ்.பி வெங்கடேஸ்வரன், சேலம் மேற்கில் இரா. அருள், செஞ்சி தொகுதியில் எம்.பி.எஸ். ராஜேந்திரன் பாமக வேட்பாளர்களாக போட்டியிடுவர் என்று பாமக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon