குழந்தைகளை தாக்க வேண்டாம் எனக்கூறி இராணுவத்தினர் முன் மண்டியிட்ட கன்னியாஸ்திரி..!
மியான்மரில் குழந்தைகளை தாக்க வேண்டாம் எனக்கூறி கன்னியாஸ்திரி இராணுவத்தினர் முன் மண்டியிட்ட நிகழ்வு காண்போரை நெகிழ வைத்துள்ளது. மியான்மரில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்த பின்னர் அங்கு நடைபெறும் வன்முறை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர்.
இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் மியான்மரில் ஒரு கன்னியாஸ்திரி ராணுவத்தினர் முன் மண்டியிட்டு குழந்தைகளை தாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
குழந்தைகளுக்கு பதிலாக வேண்டுமானால் தனது உயிரை எடுத்துக் கொள்ளுங்கள் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். ஆனால் ராணுவத்தினரும் அவர்முன் மண்டியிட்டு போராட்டத்தை நிறுத்த தங்களுக்கு வேறு வழி இல்லை என்றும் தாங்கள் அதை செய்து தான் ஆக வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
அதன்பின் ராணுவத்தினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசியதில் கன்னியாஸ்திரி மயங்கி விழுந்துள்ளார். அவர் கண் விழித்துப் பார்த்த போது ஒருவர் சுடப்பட்டு இறந்து கிடந்ததாக கன்னியாஸ்திரி வேதனை தெரிவித்தார்.






