--- --:--:-- --

பெண்கள் கழிவறைக்குள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த இளைஞர்..!

7

பெண்கள் கழிவறைக்குள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த இளைஞரை அந்த பெண்ணின் காலில் மக்கள் அவனை விழுந்து மன்னிப்பு கேட்க வைத்து உள்ளனர். எனினும் அந்தப் பெண் இளைஞர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனத்துறை அலுவலகம் அருகே தனியார் உணவு விடுதி இயங்கி வருகிறது. இந்த உணவு விடுதியில் கோழிக்கோட்டை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் உணவருந்த சென்றுள்ளனர் அப்போது 30 வயது மதிப்புள்ள பெண் கழிவறைக்கு சென்றுள்ளார்.

 

அப்போது கழிவறைக்கு பின்புறம் பொருத்தப்பட்டிருந்த ஜன்னல் வழியாக உணவு விடுதியில் பணிபுரியும் நடராஜ் என்பவர் எட்டி பார்த்துள்ளார். பார்த்துவிட்டு அந்தப்பெண் கழிவறையை விட்டு சட்டென்று வெளியே வந்து அந்த ஊழியரிடம் ஏன் எட்டிப் பார்த்தாய் என கேட்டுள்ளார்.

 

அதற்கு இளைஞன் சாரி என்று அசால்டாக கூறியுள்ளார். அந்தப் பெண் தனது குடும்பத்தாரிடம் சொல்ல அவர்கள் கோபமடைந்து இறங்கி அடிக்க துவங்கியுள்ளனர். கொச்சின் உரிமையாளர் அந்தப் பெண்ணிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க இளைஞனிடம் கூறினார்.

 

இளைஞன் காலில் விழுந்த போது அந்தப் பெண் அவனை கடும் கோபத்துடன் தாக்கியுள்ளார். பின்னர் அந்த இளைஞரை கொடைக்கானல் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon