--- --:--:-- --

பூமியை மோதப் போகிறதா குறுங்கோள்..!

4

நேற்று இரவு பூமியை சிறு குறுங்கோள் ஒன்று கடந்து சென்றுள்ளது. எகிப்து கடவுளான காட் ஆப் சேயாஸ் எனப்படும் அகோபிஸ் என பெயரிடப்பட்ட இந்த குறுங்கோள் சுமார் 340 மீட்டர் அகலம் கொண்டதாக இருந்ததாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

கடந்த 2004ஆம் ஆண்டு ஹரிசோனாவில் உள்ள கிட்பிக் தேசிய ஆய்வகத்தாரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குறுங்கோள் அடிக்கடி சூரியனை சுற்றி வருவதும் பூமிக்கு அருகே வந்து செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

அகோபிஸ் குறுங்கோள் 2029 ஆம் ஆண்டு பூமிக்கு மிகவும் நெருக்கமாக வரும் என்றும், 2068 ஆம் ஆண்டில் பூமி மீது மோதுவதற்கு சாத்தியம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஒரு வேளை இந்த குறுங்கோள் மோதினால் 280மில்லியன் டன் டி‌எம்‌டி வெடிபொருள் வெடிக்கும் அளவிற்கு விளைவு ஏற்படும் என்றும் கூறுகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon