விண்வெளியில் அமைக்கப்பட்டு வரும் நவீன ஹோட்டல்..!
விண்வெளியில் நவீன வசதிகளுடன் கூடிய 400 அறைகள், சினிமா தியேட்டர் உள்ளிட்டவை அடங்கிய ஹோட்டலை அமெரிக்க நிறுவனம் ஒன்று உருவாகி வருகிறது. அமெரிக்காவின் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் ஸ்டேஷன் கட்டுமான பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
நாசா வீரர்கள், விமானிகள், பொறியாளர்கள் மற்றும் கட்டடக் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் 24 ஒருங்கிணைந்த வாழ்வியல் தொகுதியில் ஒவ்வொன்றுக்கும் 20 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளது. அறைகள், சினிமா தியேட்டர், மசாஜ் கிளப் என்ற ஏராளமான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.






