270 கிலோ எடையுள்ள 2 மோட்டார் சைக்கிள்களை தோளில் சுமந்து சென்று சாதனை..!
நாகர்கோவிலை சேர்ந்த வாலிபர் ஒருவர் 270 கிலோ எடையுள்ள 2 மோட்டார் சைக்கிள்களை தோளில் சுமந்தபடி 42 மீட்டர் தூரம் நடந்து சாதனை புரிந்திருக்கிறார். இரும்பு மனிதன் எனும் பட்டம் பெற்ற அந்த பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் ஏற்கனவே 9 டன் எடையுள்ள லாரியை கயிற்றால் கட்டி இழுத்து சாதனை படைத்துள்ளார்.
இந்த நிலையில் இரு மோட்டார் சைக்கிளோடு 42 மீட்டர் தூரம் நடந்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் இதே போல 30 மீட்டர் கடந்ததே சாதனையாக இருந்தது.






