தொகுதிக்கு 3 பறக்கும் படைகள்! அதிரடி காட்டும் தேர்தல் ஆணையம்!!
தமிழக சட்டசபைத் தேர்தலில், தொகுதிக்கு ஒன்றுக்கு தலா மூன்று பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக, தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. ஒரே கட்டமாக நடைபெறும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளையும், தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறவும் பல்வேறு ஏற்பாடுகளை தமிழக தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறதுல் வாக்குப் பட்டியல், வாக்குச்சாவடி, வாக்கு இயந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்கும் தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தை விதிமுறைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, சென்னையில் தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியதாவது: தமிழகத்தில் 6,26,74,446 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில், ஆண் வாக்காளர்கள் 3,08,38,473; பெண் வாக்காளர்கள் 3,18,28,727 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 7,246 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் 80 வயதுக்கு மேல் 12.91 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 1,08,718 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 8,253 வாக்காளர்களும் உள்ளனர்.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் பணிக்காக 330 கம்பெனி துணை ராணுவ படையினர் கேட்டுள்ளோம். 45 கம்பெனி துணை ராணுவப்படையினர் தமிழகத்தில் வந்துள்ளன. இரண்டு நாளில் 15 துணை ராணுவத்தினர் வர உள்ளனர். அரசு பொது இடங்களில் விதிகளை மீறி வைக்கப்பட்ட 53,404 போஸ்டர்கள், பேனர்கள் நீக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிகளை மீறி போஸ்டர், பேனர் வைத்த புகாரில் 46 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 234 தொகுதிகளுக்கு தலா 702 பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு தொகுதிக்கு தலா மூன்று பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு வீடியோ குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. இறந்த தலைவர்களின் சிலைகளை மூடக்கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறோம் என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




