--- --:--:-- --

இராமநாதபுரம் எல்.ஐ.சி. அலுவலகம் சார்பில் இராமநாதபுரம் அரண்மனை முன்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது..!

7.1

ப்பேரணிக்கு மதுரை கோட்ட முதுநிலை மேலாளர் எல். செந்தூர்நாதன் தலைமையேற்றார்.  அவர் பேசியதாவது; இந்தியா முழுவதும் எல்.ஐ.சி. நிறுவனம் ரூ.40 கோடிக்கு மேல் பாலிசிதாரரை கொண்ட மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம். இந்தியளவில் இன்சூரன்ஸ் வணிகத்தில் எல்.ஐ.சி., தனது சிறப்பான சேவை மூலம் முதலிடத்தில் உள்ளது.

 

மதுரை கோட்ட வணிக மேலாளர் வி.எஸ் அனந்தகுமார் முன்னிலை வகித்தார். அவர் பேசும்போது எல்.ஐ.சி., யில் மக்களுக்கு நல்ல பயண் தரக்கூடிய பீமஸ்ரீ . ஜீவன்உமங் ஜீவன் ஆனந்த் உள்ளிட்ட பாலிசியின் பலன்களை எடுத்துரைத்தார் .

 

இராமநாதபுரம் முதுநிலை கிளை மேலாளர் ஜி.லெட்சுமணன் வரவேற்றார். அவர் பேசும்போது மதுரை கோட்டம் 6 மாவட்டங்களை உள்ளடக்கியது இதில் புது வணிகத்தில் மதுரை கோட்டத்திலயே இராமநாதபுரம் கிளை தான் முன்னணியில் உள்ளது . அதற்கு காரணம் எல்.ஐ.சி. முகவர்களின் கடினமான உழைப்பும் , எல்.ஐ.சி.யில் பாலிசிதாரர்களுக்கு விரைவான சேவை வழங்கப்படுவதும் தான் என்றார்.

பேரணியை காவல் ஆய்வாளர் முத்துப்பாண்டி கொடியசைத்து துவக்கி வைத்தார் . மூத்த முகவர்களான செல்வராஜ் , கர்ணன் , தட்சினாமூர்த்தி , அருள்ஜோதி , மூர்த்தி உள்ளிட்ட ஏராளமான முகவர்களும் , முதல் நிலை அதிகாரிகள் மணிகண்டன் உள்ளிட்ட வளர்ச்சி அதிகாரிகள், முத்து பாண்டி உள்ளிட்ட அலுவலக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

 

உதவி கிளை மேலாளர் சிவக்குமார் ஏற்பாடு செய்து இருந்தார். இராமேஸ்வரம் கிளை மேலாளர் டி. சுப்ரமணியம் நன்றி கூறினார். இப்பேரணி அரண்மனையில் தொடங்கி கேணிக்கரை , புதிய பேருந்து , நிலையம் வழியாக எல்.ஐ.சி. அலுவலகம் வரை நிறைவு செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon