--- --:--:-- --

குழந்தை பெற்றெடுத்து 3 மாதங்கள் கழித்து பார்த்த தாய்..!

6

பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித்தாய் கோமா நிலைக்கு சென்றதால் மயக்க நிலையில் குழந்தையை பெற்று மூன்று மாதங்கள் கழித்து நினைவு திரும்பிய பிறகு பெற்ற குழந்தையை சந்தித்த உருக்கமான சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள பெண் நான்காவது முறையாக கர்ப்பம் தரித்து குழந்தையைப் பெற்றெடுக்க இருந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் கொரொனா தொற்று பரவியது.

 

அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவரீதியில் கோமாவில் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து பெண் குழந்தையைப் பிரசவித்து செய்தனர். தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகள் செய்யப்பட்டதால் அவர் குழந்தையை பார்க்கவில்லை.

 

இந்த நிலையில் மூன்று மாதங்கள் இடைவெளிக்குப் பின் கோமா நிலையில் இருந்த தாய் பெற்ற குழந்தையை பாசத்துடன் கொஞ்சி மகிழ்ந்தார். தாய் கோமாவில் இருந்த போது தந்தையே தாயுமாகி குழந்தையை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டு ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon