இன்று மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்..!
The Minister of State for Commerce & Industry (Independent Charge), Smt. Nirmala Sitharaman addressing a press conference, in New Delhi on October 14, 2016.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். கடந்த 29 ஆம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.
இந்நிலையில் 2021 – 2022 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்று காலை 11 மணியளவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்கிறார். முன்னதாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்திய சுதந்திரத்திற்கு முதல் முறையாக தாக்கல் செய்யப்படும் காகிதமில்லா பட்ஜெட் அறிக்கை செயலியும் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. பெருந்தொற்றுக்கு பிறகு தாக்கல் செய்யப்படும் இந்த மத்திய பட்ஜெட்டில் கொரொனா ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு சலுகைகளும், வரி குறைப்பு திட்டங்களும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முறையாக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத்துறை, உள்கட்டமைப்பு ராணுவம் போன்றவற்றில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இருக்குமா என்றும் நடுத்தர மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் 50க்கும் மேற்பட்ட மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.






