--- --:--:-- --

சட்டக் கல்லூரி மாணவியை காதலித்து கர்ப்பமாக்கி கருவை கலைக்க கூறி திருமணம் செய்ய மறுத்த நபர்..!

2

சென்னையில் நீதிபதியின் மகன் எனக் கூறி சட்டக் கல்லூரி மாணவியை காதலித்து கருவையும் கலைத்து கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரம்பூரை சேர்ந்த பாலாஜி என்ற அந்த நபர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் மாணவியை காதலித்து வந்துள்ளார்.

 

ஒருகட்டத்தில் கருவுற்ற அந்த மாணவி திருமணம் செய்துகொள்ள கேட்டபோது கருவை கலைத்து விட்டு வந்தால் திருமணம் செய்து வைப்பதாக பாலாஜியின் தாயார் கிருஷ்ணவேணி, சகோதரி சுஜாதா ஆகியோர் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

 

விருப்பமே இல்லாமல் கருவை கலைத்த மாணவியிடம் மிரட்டியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் பணத்தையும் பறித்ததாக பாலாஜியின் குடும்பம் மீது மாணவி கொடுத்த புகாரின் பேரில் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்யாமல் காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் வழக்கை வாபஸ் வாங்க கோரி வீடு தேடிச் சென்று மிரட்டிய பாலஜியையும் அவனது குடும்பத்தாரையும் மாணவியின் உறவினர்கள் சுற்றி வளைத்துப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon