--- --:--:-- --

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 68வது நாளாக தொடர்கிறது..!

5

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் 68வது நாளாக தொடர்கிறது. புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் இரண்டு மாதங்கள் கடந்து விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

 

கடந்த 26ஆம் தேதி விவசாயிகள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இதைத்தொடர்ந்து சிங்கு எல்லையிலும் வன்முறை ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

 

சாலைகள் மூடப்பட்டு அங்கு போராடும் விவசாயிகளுக்கு குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. சட்டத்திருத்தங்கள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு உறுதியாக உள்ளனர். இதனால் விவசாயிகள் தொடர் போராட்டம் இன்று 78வது நாளாக தொடர்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon