--- --:--:-- --

கல்லூரி மாணவர்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டம் இன்று தொடக்கம்..!

6

ல்லூரி மாணவர்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்குகிறார். கொரொனா காரணமாக கல்லூரிகள் பல மாதங்களாக மூடப்பட்டுள்ள நிலையில் கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கு இணைய வழியாக வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.

 

வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்ள ஏதுவாக ஏப்ரல் மாதம் வரை எல்காட் நிறுவனத்தின் மூலமாக 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும் என கடந்த 10ஆம் தேதி முதல் அமைச்சர் அறிவித்திருந்தார்.

 

அதன்படி இன்று தலைமை செயலகத்தில் அவர் இந்த திட்டத்தை தொடக்கி வைக்கிறார். இதன்மூலம் 9 லட்சத்து 69 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon