தோனி ஸ்ட்ராபெரிகளை சுவைக்கும் காட்சி வைரல்..!
16 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டின் அடையாளமாக இருந்த மகேந்திர சிங் தோனி விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் இப்போது ஆர்கானிக் விவசாயத்தில் கலக்கி வருகிறார். ராஞ்சியில் உள்ள பத்து ஏக்கர் பண்ணையில் அவர் விளைவிக்கும் காய்கறிகளுக்கு ராஞ்சி சந்தையில் நல்ல கிராக்கி உள்ளது.
யுஏஇ போன்ற நாடுகளுக்கும் காய்கறி ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ள தோனி சுவையான ஸ்ட்ராபெரிகளையும் பயிரிட்டு அசத்தியுள்ளார். வீடியோவில் ஸ்ட்ராபெர்ரியை அவர் சுவைக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இப்படியே போனால் விற்பதற்கு ஸ்ட்ராபெரி எதுவும் பண்ணையில் இருக்காது என்ற சுவையான பதிவையும் தோனி பதிவிட்டுள்ளார்.






